Sunday, March 15, 2020

குழந்தைகள் தினவிழா


         வெள்ளை மனம் கொண்டவர்கள். விறுப்பு, வெறுப்பு தெரியாதவர்கள் குழைந்தைகள், எனவேதான் அவர்களை கடவுளோடு ஒப்பிடுகிறோம்.

இளங்க்காலை பொழுதில் புல்லின் பனித்துளியில் ஒளிர்வீசும் கதிரவனின் கதிர் போல முகப்பொலிவுடையவர்கள்.

மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் அவர்கள், ஆரவாரத்தின் சத்தம் அவர்கள், பாசத்தின் விளக்கம் அவர்கள், தமிழ் மொழியின் அமுதம் அவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் குழைந்ததை செல்வங்களை பற்றி.

இந்த மழலைச் செல்வங்களுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20 ஆம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகின்றது.  ஆனால் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடுகின்றனர்.

ஏன்னென்றால் இந்தியாவின் முதல் பிரதமரான திரு. ஜவர்களால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது மிக அதிக அன்புகொண்டவர், எனவே குழந்தைகள் அனைவரும் அவரை அன்புடன் "நேரு மாமா" என்று அழைப்பார்கள். குழந்தைகள் மீது இருந்த அளவுகடந்த பாசத்தால் பண்டித ஜவர்களால் நேரு அவர்கள், தனது பிறந்தநாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடும் படி வலியுறுத்தினார். எனவே தான் இந்தியாவில் மட்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் குழைந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் கல்வியின் உறுதி நிலை குறித்து அரசிடம் அறிவுறுத்தப் படுகின்றன. ஆனால் இன்று நம்மில் சில மழலை செல்வங்கள் பசி, பட்னி, பாலியல் வன்கொடுமை போன்ற இடுப்பாட்டிற்கு நடுவில், இருக்க இடம்மின்றி, குழைந்தை தொழிலாளர்களாக, கல்வியை தன் கனவாக, கனவில் மட்டும் பள்ளி சென்றுகொண்டு வாழும் குழைந்தைகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ற வினாவினை முன் வைக்கிறேன்.

"கர்மவீரர் கண்ட கனவு மெய்ப்பட 
நம் இளைய சமுதாயம் திறன்பட"

நாம் அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டு, அதன் முதல் படிதான் "கற்போம் கற்பிப்போம்"

அனைத்து குழைந்தை செல்வங்களுக்கு எனது                              
 "இனிய குழைந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்" 





வீர விநாயகா வெற்றி விநாயகா

தந்தை

தன்னம்பிக்கையின் ஊன்றுகோல் ,
உழைப்பின் அடையாளம்,
மவுனத்தின் வலிமை ,
மெழுகுவர்த்தி வாழ்கை ,
அன்பின் உருவம், 
வீரத்தின் ஊற்று,
முயற்சியின் வேகம்,
தைரியத்தின் பிறப்பிடம்,
கம்பீரத்தின் தோற்றம்,
பொறுமையின் சிகரம்,
சிரிப்பின் அழகு,
வாழ்வின் பிடிப்பு,
எனது முகவரி 

-- என் தந்தை.